பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா CSK? - இன்னும் என்ன வாய்ப்புகள் உள்ளது?

21 சித்திரை 2025 திங்கள் 10:22 | பார்வைகள் : 251
17 ஐபிஎல் தொடர்களில் தலா 5 முறை கோப்பையை வென்ற சென்னை மற்றும் மும்பை அணிகள், 2025 ஐபிஎல் தொடரில் தடுமாறி வருகிறது.
தொடக்கத்தில் தடுமாறிய மும்பை அணி, தற்போது தொடர் வெற்றிகளை பெற்று பழைய நிலைக்கு வந்துள்ளது.
ஆனால் சென்னை அணியின் நிலை மிக மோசமாக உள்ளது. நேற்று வான்கடேவில் நடைபெற்ற போட்டியில், மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதியது
.
இதில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பாட்டம் ஆடிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு, 176 ஓட்டங்கள் எடுத்தது.
17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே, அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார். சிவம் தூபே மற்றும் ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்தனர்.
177 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 15.4 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து, 177 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் ஷர்மா(76) மற்றும் சூர்யகுமார் யாதவ்(68) அரைசதம் அடித்தனர்.
இதன் மூலம் புள்ளிபட்டியலில் 8 வது இடத்தில் இருந்த மும்பை அணி, தற்போது 4 வெற்றி 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சென்னை அணி, 8 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் மட்டும் பெற்று 10வது இடத்தில் உள்ளது.
இதனால் சென்னை அணி இந்த முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற, ஒரு அணி குறைந்தபட்சம் 8 போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
4 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள சென்னை அணி, 16 புள்ளிகள் பெறுவதற்கு இனி வரும் 6 போட்டிகளிலும் அதிக ரன் ரேட்டுடன் சென்னை அணி வெற்றி பெற்று ஆக வேண்டும்.
அதேவேளையில், சென்னை 16 புள்ளிகள் பெற்றாலும், 5 அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்றிருப்பதால், மற்ற அணிகளின் போட்டி முடிவுகளை பொறுத்தே சென்னையின் பிளே-ஆஃப் வாய்ப்பு உள்ளது.
முதல் 2 இடங்களில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் 7 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகள் பெற்றிருப்பதால், பிளே-ஆஃப் செல்ல அதிக வாய்ப்புள்ளது.
அடுத்த இடங்களில் உள்ள பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து, மற்ற அணிகள் சில வெற்றிகளை மட்டும் பெற்றால் சென்னை அணிக்கு வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 6 போட்டிகளில் ஒரு போட்டியில் தோற்றால் கூட சென்னை அணி பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும்.