Joinville-le-Pont : பரபரப்பை ஏற்படுத்திய வெடிபொருள் பெட்டி!ஒருவர் கைது!

20 சித்திரை 2025 ஞாயிறு 22:06 | பார்வைகள் : 828
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 20 Marne ஆற்றின் கரையில் Joinville-le-Pont பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்று கட்டிட சேதங்கள் போடும் குப்பையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் 430 கிராம் TNT வெடிபொருட்கள், வெடிபொருள் கருவிகள் மற்றும் பல்வேறு திரவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து காவல் துறையினர் மற்றும் ஆய்வக நிபுணர்கள் இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்புக்காக சாலை மற்றும் அருகிலுள்ள வீடுகள் காலிசெய்யப்பட்டன.
இந்த வெடிபொருட்கள் ஒரு நபர் அவரது இறந்த தாத்தாவின் வீடு சுத்தம் செய்யும் போது தெருவில் போட்டதாக காவல்துறையினரிடம் சரணடைந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்து, அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.
இது இரண்டாம் உலகப்போரின் போது பதுக்கி வைக்கப்பட்டதாக இருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தற்போது வழக்கை Val-de-Marne மாவட்ட குற்றவியல் பிரிவு விசாரணை செய்து வருகிறது.