Paristamil Navigation Paristamil advert login

Bondy : இருவருக்கு கத்திக்குத்து... ட்ராமில் வைத்து மூன்றாவது நபர் மீதும் தாக்குதல் - ஒருவர் கைது!!

Bondy : இருவருக்கு கத்திக்குத்து... ட்ராமில் வைத்து மூன்றாவது நபர் மீதும் தாக்குதல் - ஒருவர் கைது!!

20 சித்திரை 2025 ஞாயிறு 14:38 | பார்வைகள் : 2163


Bondy (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றில் வைத்து இருவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8.45 மணி அளவில் நபர் ஒருவர் T4 ட்ராமில் வைத்து கைது செய்யப்பட்டார். சக பயணி ஒருவரை அவர் தாக்கிக்கியுள்ளார். அதன் போது காவல்துறையினர் தலையிட்டு குறித்த நபரைக் கைது செய்தனர்.

மோல்டோவா குடியுரிமை கொண்ட அவரது வீடு Bondy நகரில் உள்ளது. கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவர் Bondy நகரில் உள்ள வீடொன்றில் இரு நபர்களை கத்தியால் குத்தியுள்ளார்.

ஒருவருக்கு கையிலும், ஒருவருக்கு தொண்டையிலும் கத்தியால் குத்தியுள்ளார். இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் வழங்கிய தகவலை அடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். தாக்குதலுக்கு இலக்கான மூன்றாவது நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்