Paristamil Navigation Paristamil advert login

காரசாரமான பூண்டு சட்னி

காரசாரமான பூண்டு சட்னி

20 சித்திரை 2025 ஞாயிறு 14:31 | பார்வைகள் : 230


பெரும்பாலும் அனைவரும் வீட்டில் காலை மாலை என இரு வேலைகளிலும் வீட்டில் இட்லி தோசை சப்பாத்தி தான் தினமும் செய்வோம். வீட்டில் இட்லி, தோசைக்கு பெரும்பாலும் கார சட்னி, தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி தினந்தோறும் கண்டிப்பாக இருக்கும். அதோடு சுவையாக டிபனுக்கு இப்படி ஒரு தடவை பூண்டு சட்னி செய்து பாருங்க..

தேவையான பொருட்கள்: 

பூண்டு பல் 150 கிராம், 6 காய்ந்த மிளகாய் 10, பத்து சின்ன வெங்காயம், சிறிதளவு புளி, கறிவேப்பிலை 2 கொத்து, எண்ணெய், தேவையான அளவு உப்பு.

செய்முறை: 

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வர மிளகாய், பூண்டு புளி தோல் வதக்கி எடுத்துக் கொள்ளவும். பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும். 
வறுத்த அனைத்தையும் நன்றாக ஆற வைக்க வேண்டும். ஆறியதும் உப்பு, சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.  தாளிப்பதற்கு எண்ணெய், கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து அரைத்த சட்னியில் சேர்த்தோமானால் சுவையான பூண்டு சட்னி தயார்.  

இந்த காரசாரமான சுவையான பூண்டு சட்னி செய்து இட்லி, தோசை, சப்பாத்தி சுட சுட சாதத்தில் போட்டு கூட சாப்பிடலாம் சைட் டிஷ் கூட தேவைப்படாது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்