மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கும் Flamanville அணுமின் நிலையம்!!

20 சித்திரை 2025 ஞாயிறு 13:42 | பார்வைகள் : 677
கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்தFlamanville அணுமின் நிலையம் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்க உள்ளது.
அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி மூடப்பட்டிருந்தது. திருத்தப்பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், ஏப்ரல் 25 ஆம் திகதி மீண்டும் மின் உற்பத்தி பணிகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பாக - நாளை ஏப்ரல் 21 ஆம் திகதி திங்கட்கிழமை சேவைகள் ஆரம்பமாகும் எனவும், தேசிய மின்வழங்கல் சபையிடம் மின்சார இணைப்பு தொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் தேவைக்கு அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் முந்தைய ஆண்டில் €80 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.