அமைச்சர்கள் மாநாடு - Mayotte தீவில் இருந்து கலந்துகொள்கிறார் ஜனாதிபதி மக்ரோன்!!

20 சித்திரை 2025 ஞாயிறு 12:13 | பார்வைகள் : 454
நாளை ஏப்ரல் 21 ஆம் திகதி பரிசில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் மாநாட்டில் (Conseil des ministres) ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Mayotte தீவில் இருந்து காணொளி நேரலையூடாக கலந்துகொள்ளவுள்ளார்.
இந்திய பெருங்கடலின் தென்மேற்கே உள்ள Mayotte தீவினை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் Chido எனும் புயல் தாக்கியிருந்தது. மிகவும் சக்திவாய்ந்த இந்த புயலினால் பாதிக்கப்பட்ட அத்தீவினை மீண்டும் கட்டி எழுப்பும் நடவடிக்கையை பிரான்ஸ் முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு அங்கமாக ஜனாதிபதி மக்ரோன் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அதை அடுத்து இது தொடர்பில் அமைச்சர்களுடன் கலந்துரையாக இந்த காணொளி நேரலையூடாக (visioconférence) பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.