சிறைச்சாலையில் தனி அறை ஏற்பாடு செய்த ஐரோப்பிய நாடு!

20 சித்திரை 2025 ஞாயிறு 10:13 | பார்வைகள் : 785
பிரபல ஐரோப்பிய நாடொன்றில், முதல் முறையாக சிறைச்சாலையில் கைதிகள் உறவுகொள்வதற்காக தனி அறை ஏற்பாடு செய்துள்ளது.
இத்தாலியின் மத்திய பகுதியில் உள்ள Umbria மாநிலத்தின் தெர்னி சிறைச்சாலையில், ஒரு கைதி தனது காதலியுடன் தனிப்பட்ட நேரத்தை கழிக்க அனுமதிக்கப்பட்டதன் மூலம், நாட்டின் முதலாவது “செக்ஸ் ரூம்” என்ற சிறை வசதி ஆரம்பமாகியுள்ளது.
இந்த புதிய ஏற்பாடு, கைதிகள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் தனிப்பட்ட சந்திப்புகள் நடத்தும் உரிமையைப் பெற வேண்டும் என 2024 ஜனவரியில் இத்தாலி அரசின் அரசியலமைப்புச் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறையில் ஒரு கட்டில் மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இரு மணி நேரம் வரை அந்த அறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
இருப்பினும், பாதுகாப்பு காரணமாக அறையின் கதவு பூட்டப்படாது என நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய தனி அறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
இத்தாலி இப்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது.
சிறைகளில் அதிக மக்கள் நெருக்கடி மற்றும் உயரும் தற்கொலை எண்ணிக்கை ஆகியவற்றை எதிர்கொள்ளும் இத்தாலி, கைதிகளின் உணர்வியல் நலனைக் கருத்தில் கொண்டு எடுத்துள்ள இந்த முயற்சி பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது.