Paristamil Navigation Paristamil advert login

போர் நிறுத்த அறிவிப்பை நிராகரிக்கும் ஜெலென்ஸ்கி

போர் நிறுத்த அறிவிப்பை நிராகரிக்கும் ஜெலென்ஸ்கி

20 சித்திரை 2025 ஞாயிறு 10:08 | பார்வைகள் : 532


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஈஸ்டர் போர் நிறுத்த அறிவிப்பை ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா அறிவித்த "ஈஸ்டர் போர் நிறுத்தத்தின்" நம்பகத்தன்மையை பகிரங்கமாக மறுத்துள்ளார்.

ரஷ்யப் படைகள் முன் களத்தின் பல இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விளாடிமிர் புடின் அறிவித்த போர் நிறுத்தம் இருந்தபோதிலும், உக்ரைன் நிலைகள் தொடர்ந்து கடுமையான பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, "மாஸ்கோவில் இருந்து வரும் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை" என்று அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக X-இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், ரஷ்யாவின் ஏமாற்றும் வரலாற்றை ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டி, "மாஸ்கோ எவ்வாறு கையாளுகிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம், மேலும் எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.

மேலும், அதில் "உக்ரைனின் பாதுகாப்புப் படைகள் பகுத்தறிவுடன் செயல்பட்டு ஒவ்வொரு ரஷ்ய தாக்குதலுக்கும் பொருத்தமான பதிலடி கொடுக்கும் என்று உக்ரைனின் உறுதியை ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்