இலங்கையில் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

20 சித்திரை 2025 ஞாயிறு 05:20 | பார்வைகள் : 266
உயிர்த்த ஞாயிறு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அனைத்து பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அதன்படி, விசேடமாகப் பிரதான ஆராதனைகள் நடைபெறும் தேவாலயங்கள் குறித்த அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் பதில் பொலிஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.