Paristamil Navigation Paristamil advert login

■ அவதானம் : குழந்தைகளுக்கான உணவில் நஞ்சு! - மீளப்பெறப்படுகிறது!!

■ அவதானம் : குழந்தைகளுக்கான உணவில் நஞ்சு! - மீளப்பெறப்படுகிறது!!

20 சித்திரை 2025 ஞாயிறு 03:31 | பார்வைகள் : 1670


Nestlé  நிறுவனத்தின் குழந்தைகளுக்கான உணவு ஒன்றில் நச்சுத்தன்மை கலந்திருப்பதை அடுத்து, நாடு முழுவதும் இருந்து உணவுகள் மீளப்பெறப்படுகின்றன. 

போத்தலில் அடைத்து விற்பனை செய்யப்படும் நெஸ்லே நிறுவனத்தின்  Nestlé P’tite Recette, Nestlé Naturnes மற்றும் Nestlé P’tit Souper ஆகிய மூன்று உணவுகளும் மீளப்பெறப்படுகின்றன. அவற்றில் Lentilles Vertes Jambon, Paëlla, Spaghetti Bolognaise, Tajine de Poulet, Couscous, Spaghetti Bolognaise BIO, Pastasotto Légumes Verts Carottes, Légumes du Soleil Dinde riz ஆகிய சுவையுடைய உணவுகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பதாகவும், இந்த உணவுகளை வாங்கியவர்கள் அதனை பயன்படுத்த வேண்டாம் எனவும், மீள கையளித்து பணத்தினை பெற்றுக்கொள்ளவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leclerc, Intermarché, Auchan, Carrefour உள்ளிட்ட விற்பனை நிலையங்களில் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து இந்த உணவுகள் விற்பனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்