19 வயது இளைஞனின் கொலை - இளம் வயதுக் கொலையாளிகள் சிறையில்!!

19 சித்திரை 2025 சனி 22:07 | பார்வைகள் : 6235
12 நாட்களின் முன்னர் Vaulx-en-Velin இல் நடு ரோட்டில் வைத்து பாடசாலை அருகில் முகத்தில் சுடப்பட்டு 19 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்;டிருந்தார்.
13 மணியளவில் பாடசாலை அருகில் இந்தக் கொலை நடந்ததால், பிள்ளைகளை மாலை வரை பாடசாலைக்குள்ளேயே பத்திரமாக வைத்திருந்துள்ளனர்.
இந்தப் படுகொலை, போதைப்பொருள் தொடர்பில் நடந்த கொலை எனவே காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்தக் கொலையைச் செய்த இளம் வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் 19 மற்றும் 20 வயதுடைய ஆண்களும், 18 வயதுடைய பெண்ணும் ஆவார்கள் என்பதும் இந்த இளம் வயதிலேயே கொடூரக் கொலைகளைச் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025