Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

மெட்ரோவினுள் பாய்ந்து சாவடைந்த மாணவன்- அதிர்ச்சியில் சக மாணவர்கள்!!!

மெட்ரோவினுள் பாய்ந்து சாவடைந்த மாணவன்- அதிர்ச்சியில் சக மாணவர்கள்!!!

19 சித்திரை 2025 சனி 22:06 | பார்வைகள் : 5937


கடந்த வெள்ளிக்கிழமை மிகவும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

7ம் இலக்க மெட்ரோவான Maison Blanche  இல் ஒரு 16 வயதுடைய மாணவன் மெட்ரோவினுள் குத்தித்துச் சாவடைந்துள்ளார்.

மூன்று வாரங்களின் முன்னர் 12ம் இலக்க மெட்ரோவான கொன்கோர்டில் 30 வயதுகளில் உள்ள ஒருவர் தற்கொலை செய்தததையடுத்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பெல்ஜியத்திலிருந்து சுற்றுலாவிற்கு வந்த 26 சக மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் முன்னிலையில் இவர் மெட்ரோவினுள் குதித்துத் தற்கொலை செய்துள்ளார்.
சக மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிiலையில், அவர்களை ஆற்றுப்படுத்த, உளவியல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையில், தற்கொலை செய்த மாணவன் பெரும் மன அழுத்தத்திற்கான மருந்துகள் எடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்