காணவில்லை!! உதவிகோரும் ஜோந்தார்ம்!!

19 சித்திரை 2025 சனி 22:05 | பார்வைகள் : 3913
Vienne நகரத்தின் ஜோந்தார்மினர் கடந்த 17ம் திகதியிலிருந்து காணாமற்போன 12 வயதுடைய சிறுவனைக் காணவில்லை எனத் தேடுதல் நடாத்தி வருகின்றனர்.
கடத்தி அடைக்கபபட்டிருக்கலாம் என்ற நோக்கத்தில் தேடுதல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதே நகரில் பயிற்சி ஓட்டத்தின் போது காணாமற்போன அகெதே என்ற 28 பெண்ணையும், 91 வயதுடைய பெண்னையும் தொடர்ந்து தற்போது இந்த 12 வயதுச் சிறுவன் காணாமற் போயுள்ளான்.
இந்தப் பயிற்சி ஓட்டப் பெண்ணின் எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.
ஜோந்தார்மினர் தந்த தகவலின்படி, சிறுவன் காணாமற் போனபோது, பழுப்பு நிற முடியுடன், பழுப்பு நிற கண்களுடன், 1.35 மீட்டர் உயரத்துடன், கண்ணாடியும் அணிந்திருப்பான் எனவும், நீல நிற டெனிம் நீளக்;காற்சட்டையும், கடல் நீல மேலாடையும்;, வெள்ளை காலணிகள் மற்றும் வெள்ளை எழுத்துக்களுடன் நீலம் மற்றும் கருப்பு நிற Kappa பையை அணிந்திருந்தார் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.
இவர் பற்றிய தகவல்கள் கிடைத்தால் உடனடியாக 05.49.60.60.00 எனும் இலக்கத்திற்குத் தகவல் தருமாறு ஜோந்தார்மினர் அறிவித்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025