Drancy avenir வணிக வளாகத்தில் முகமூடி அணிந்து கொள்ளை! மூவர் கைது!

19 சித்திரை 2025 சனி 21:02 | பார்வைகள் : 4292
ஏப்ரல் 15 செவ்வாய்க்கிழமை Drancy நகரில் உள்ள avenir வணிக மையத்தில் உள்ள Bouygues Telecom கடையில் மூன்று சந்தேக நபர்கள் இரண்டு ஊழியர்களை கட்டிவைத்து, கடையை கொள்ளை அடிக்கும் முயற்சியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் முன்பே திருட்டு சம்பந்தமான வழக்குகளில் காவல்துறையினருக்கு தெரிந்த குற்றவாளிகள் என்றும், ஏற்கனவே கடையை கொள்ளை அடிக்க திட்டமிட்டிருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
இக்கொள்ளை சம்பவம் மாலை 7:45 மணியளவில், கடை மூட தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் நடைபெற்றது. முகமூடி அணிந்த இருவர், ஊழியர்களை கட்டிப்போட்டு 130 மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றனர்.
ஆனால் காவல் துறையினர் முன்கூட்டியே கடையை கண்காணித்து கொண்டிருந்ததால் கொள்ளையர்கள் தப்ப முடியாமல் கைது செய்யப்பட்டனர்.
ஏப்ரல் 16 அன்று, கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில், Évry Courcouronnes நகரில் உள்ள Pyramides பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இது போன்ற கொள்ளைகள் 2024ஆம் ஆண்டு, மாதம் சராசரியாக 15 கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025