டெல்லியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற குஜராத் - கே.எல்.ராகுல் படைத்த புதிய சாதனை

19 சித்திரை 2025 சனி 18:44 | பார்வைகள் : 168
ஐபிஎல் தொடரின் 35 வது லீக் போட்டி இன்று, குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலாவதாக துடுப்பாட்டம் ஆடிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு, 203 ஓட்டங்கள் குவித்தது.
முதலாவதாக துடுப்பாட்டம் ஆடிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு, 203 ஓட்டங்கள் குவித்தது.
தொடர்ந்து, 204 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து, 204 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
குஜராத் தரப்பில், ஜாஸ் பட்லர் அதிரடியாக ஆடி 97 ஓட்டங்களை எடுத்தார்.
இதன் மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அணி, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலிருந்து, முதலிடத்திற்கு சென்றது.
இரு அணிகளும் 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. NRR அடிப்படையில், டெல்லி அணி 2வது இடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் டெல்லி அணியின் அணித்தலைவர் கே.எல்.ராகுல், 14 பந்துகளில் 28 ஓட்டங்களை எடுத்தார்.
இதில் ஒரு சிக்ஸர் விளாசியதன் மூலம், அதிவேகமாக 200 சிக்ஸர்களை வீசியவர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
முன்னதாக சஞ்சு சாம்சன் 159 இன்னிங்ஸ்களில் 200 சிக்ஸர்களை அடித்து இந்த சாதனையை படைத்திருந்தார்.
தற்போது கே.எல்.ராகுல், 129 இன்னிங்ஸ்களில் 200 சிக்ஸர்களை அடித்து, அந்த சாதனையை முறியடித்தார்.