சீரற்ற காலநிலை தொடர்கிறது!

19 சித்திரை 2025 சனி 15:48 | பார்வைகள் : 705
இன்று ஏப்ரல் 19, சனிக்கிழமை பிற்பகலின் பின்னர் நாட்டின் பல மாவட்டங்களில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், நாளை ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமையும் சீரற்ற காலநிலை நாடு முழுவதும் நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.
இடி மின்னல் தாக்குதல்கள், பலத்த காற்று, மழை, வெள்ளம் மற்றும் பனிச்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 41 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் எனவும் Météo France அறிவித்துள்ளது.
தலைநகர் பரிஸ் மற்றும் இல் - து- பிரான்ஸ் மாகாணத்தின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.