Paristamil Navigation Paristamil advert login

‘மண்டாடி’ படக்குழுவின் புதிய அறிவிப்பு!

‘மண்டாடி’ படக்குழுவின் புதிய அறிவிப்பு!

19 சித்திரை 2025 சனி 15:00 | பார்வைகள் : 249


நடிகர் சூரி தற்போது தொடர்ந்து பல படங்களை ஹீரோவாக நடித்து வரும் நிலையில், ஏற்கனவே மாமன் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வருகின்ற மே 16 அன்று இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து சூரி, வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் புகழேந்தியின் இயக்கத்தில் மண்டாடி எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தில் சூரியுடன் இணைந்து சத்யராஜ், மகிமா நம்பியார், சாச்சனா, ரவீந்திர விஜய், அச்யுத் குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஆர் எஸ் இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று (ஏப்ரல் 18) வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. 

அதே சமயம் இன்று (ஏப்ரல் 19) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.!அதன்படி இன்று மாலை 7 மணி அளவில் மண்டாடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரை பார்க்கும்போது நடிகர் சூரி படத்தில் முத்துக்காளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் போட்டியை மையமாக வைத்து தயாராகி வருவது போல் தெரிகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்