Paristamil Navigation Paristamil advert login

தொடருந்து தண்டவாளத்தில் பாய்ந்த மாணவன்.. பரிசில் துயர சம்பவம்!!

தொடருந்து தண்டவாளத்தில் பாய்ந்த மாணவன்.. பரிசில் துயர சம்பவம்!!

19 சித்திரை 2025 சனி 12:49 | பார்வைகள் : 1898


பெல்ஜியத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் தொடருந்து தண்டவாளத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். பரிசில் இச்சம்பவம் ஏப்ரல் 18, நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

12 ஆம் இலக்க மெற்றோ பயணிக்கும் Concorde நிலையத்தில் 16 வயதுடைய குறித்த மாணவன் தனது சக மாணவர்களுடன் நின்றிருந்த போது, திடீரென தொடருந்து தண்டவாளத்தில் பாய்ந்து மெற்றோவுடன் மோதுண்டு பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் இருந்த 26 வரையான மாணவர்களுக்கு உளநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மூன்று வாரங்களுக்கு முன்பாக 30 வயதுடைய நபர் ஒருவர் தண்டவாளத்தில் பாய்ந்து பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தமை அறிந்ததே.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்