Paristamil Navigation Paristamil advert login

STR 49' நடிகர் சிம்பு என்ன கெட்டப்பில் நடிக்கப் போகிறார்?

 STR 49'  நடிகர் சிம்பு என்ன கெட்டப்பில் நடிக்கப் போகிறார்?

19 சித்திரை 2025 சனி 12:17 | பார்வைகள் : 329


நடிகர் சிம்பு தற்போது தனது 49 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். அதன்படி தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்கப் போகிறார் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இது தவிர நடிகை மிர்ணாள் தாகூர், சந்தானம் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க இறுதி செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது மேலும் டிராகன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கயடு லோஹர் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கிறார் எனவும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. 

அடுத்தது இந்த படமானது கல்லூரி சம்பந்தமான கதைக்களமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், இதில் சிம்பு ரௌடி மாணவனாக நடிப்பதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு படம் தொடர்பான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டிவிடுகிறது இதற்கிடையில் நடிகர் சிம்பு என்ன கெட்டப்பில் நடிக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அதன்படி தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது நடிகர் சிம்பு தற்போது நீளமான முடி, மற்றும் தாடியுடன் வலம் வருகிறார். ஆனால் STR 49 படத்திற்காக தனது நீளமான முடியை கட் செய்து, கிளீன் ஷேவ் செய்து பழைய சிம்புவாக மாறப்போகிறாராம். எனவே இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்