வாகனத்தின் மாடலைப் பொறுத்து 150 யூரோ முதல் 750 யூரோ வரை வரி: மே 1 முதல் ஆரம்பம்!

19 சித்திரை 2025 சனி 07:33 | பார்வைகள் : 2172
மின்சார வாகனங்கள் வாங்குவதை அதிகப்படுத்த முதலில் வழங்கப்பட்ட வரிச்சலுகை, 2025 நிதிச் சட்டத்தின் மூலம் முடிவுக்கு வருகிறது. மே 1, 2025 முதல், ஒவ்வொரு மாகாணமும், இயல்பான வரியை விதிக்கலாமா என்பதைத் தாங்களே தீர்மானிக்கலாம்.
பெரும்பாலான மாகாணங்கள் நிதிநெருக்கடியில் உள்ளன. எனவே, Hauts-de-France பகுதியைத் தவிர மற்ற அனைத்து பிராந்தியங்களும் மின்சார கார்கள் வாங்குவோரிடம் இந்த வரியை வசூலிக்கத் திட்டமிட்டுள்ளன.
பதிவுச் சான்றிதழிற்கு (La carte grise) 13.76 யூரோக்கள் வரி செலுத்த வேண்டும். வரி தொகை வாகனத்தின் மாடலைப் பொறுத்து 150 யூரோ முதல் 750 யூரோ வரை மாறுபடலாம்.