வாகனத் திருட்டு வலையமைப்பு சிக்கியது!! ஜோந்தார்ம் நடவடிக்கை!!

19 சித்திரை 2025 சனி 05:28 | பார்வைகள் : 1762
பெரும் விலையுள்ள சிற்றுந்துகளைத் திருடி வேறு நாடுகளிற்கு அனுப்பும் கும்பல் ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டு வாகனங்களைத் திருடி அவற்றை வெளிநாடுகளிற்கு அனுப்பும் பெரும் வலையமைப்பு லியோனில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
லியோனின் விசாரணைப் படையும், ஜோந்தார்மினரும் பல நாட்களாகச் செய்த கண்காணிப்பின் அடிப்டையில், 100 இற்கும் மேற்பட்ட ஜோந்தார்மினருடன் இந்தப் பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் இந்த வலையமைப்பின் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது மூன்று சிற்றுந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் ஒரு Audi RS 3 வும் அடக்கம். கைப்பற்றப்பட்ட மூன்று வாகனங்களின் பெறுமதி மட்டும் 127.000 யூரோக்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.