Perrier குடிநீரில் மாசுபாடு: 'நேச்சுரல் மினரல் வாட்டர்' பட்டத்தை நீக்க சுகாதாரத்துறை பரிந்துரை!!

19 சித்திரை 2025 சனி 04:36 | பார்வைகள் : 1164
பிரான்சின் பிரபலமான குடிநீர் நிறுவனமான "Perrier" பாட்டில்களில் பாக்டீரியா மற்றும் ரசாயன மாசுபாடு இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட "eau naturelle minérale" பட்டத்தை நீக்க வேண்டும் என சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
Nestlé நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Perrier குடிநீர், Vergèze (Gard) பகுதியில் உள்ள இயற்கை நீரூற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. கடந்த மாதங்களில், அந்த நீரூற்றில் ஈ.கோலை, கொலிஃபார்ம் மற்றும் ரசாயன மீதமுள்ள மாசுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஏப்ரல் மாதம் மட்டும் இரண்டு மில்லியன் பாட்டில்கள் திரும்பப் பெற்று அழிக்கப்பட்டது. இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான Foodwatch, Nestlé மற்றும் Sources Alma நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.
சுகாதார சீர்திருத்த அதிகாரிகள் "eau naturelle minérale” என்ற வகைப்பாட்டை Perrier நீருக்கு வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.