பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்

19 சித்திரை 2025 சனி 05:15 | பார்வைகள் : 353
பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
அவுரங்காபாத் நகரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாதுகாப்புத் துறையில் இந்தியாவை தன்னிறைவு பெற செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2014ல் பாதுகாப்பு துறையில் ரூ.600 கோடியாக இருந்த ஏற்றுமதி 2024ல் ரூ.24 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது.
ஏற்றுமதியை 2029- 30ல் ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்துவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. தற்போது, பாதுகாப்பு தளவாடங்கள் சார்ந்த உற்பத்தி மதிப்பு ரூ.1.60 லட்சம் கோடியாக உள்ளது. இதனை ரூ.3 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.