Paristamil Navigation Paristamil advert login

பணப் பரிமாற்றம் செய்பவரின் மனைவியும்; பிள்ளையும் கடத்தல் - 

பணப் பரிமாற்றம் செய்பவரின் மனைவியும்; பிள்ளையும் கடத்தல் - 

18 சித்திரை 2025 வெள்ளி 22:01 | பார்வைகள் : 1603


நேற்று வெள்ளிகிழமை, வங்கிகளிற்கும் நிறுவனங்களிற்கும் பணப்பரிமாற்றம் செய்யும் நபரின் (convoyeur de fonds) மனைவியும் பிள்ளையும் கடத்தப்பட்டிருந்தனர்.

கடத்தி வைத்த மூன்று நபரும், கணவனிடம் பணப்பரிமாற்றம் செய்யும் வாகனம் எந்த நேரத்தில் வரும் எனக் கேள்விகள் கேட்கப்பட்டது.

அவர் எந்த விதமான பதிலும் வழங்க முடியாது என்று மறுத்தவுடன், வேறு வழியின்றி மனைவியையும் பிள்ளையையும்  விடுவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் கடத்தற்காரர்களிற்கு ஏற்பட்டிருந்தது.

அவர்கள் பெரும் காயங்கள் எதுவுமின்றி விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இதனால் கடத்தல்காரர்களின்  பணப்பரிமாற்ற  வாகனக் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தற்காரர்கள் தொடர்பான விசாரணை  காவற்துறையின் சிறந்த ஒரு குற்றத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்