Paristamil Navigation Paristamil advert login

நீ நான் துளி மழை

நீ நான் துளி மழை

18 சித்திரை 2025 வெள்ளி 15:52 | பார்வைகள் : 183


நீயும் நானும் செல்லும் அந்த சாலையில் சிதறிடும் திடீர் தூரல்கள் யாவும் நின் முகத்தினில் படரும்

மெல்ல ஓடிச் சென்று நிழல் தரு மரமடியில் நிற்கையில் இலைச் சொட்டும் துளியதுவும் நின் கூந்தலில் தங்கும்

மென் கைப் பாதங்களை மெதுவாய்த் தேய்த்து கொண்டு கருமேக வானத்தை இரசிக்கும் நின் பார்வையில் குளிரது சற்று மிளிறும்

நனைந்திட்ட ஆடைதனில் நளினங்கள் சேர்ந்திடவே நின் கடைக் கண்கள் எனை நோக்க நாணத்தின் ஓசைகள் தூரத்தில் கேட்கும்
 
கண்டதும் காண்பதும் இயற்கையின் பேரழகே என்றே நான் இரசித்திடவும் நின் கைக்கோர்த்து சேர்ந்த நம் கரங்களில் விழுந்தன காதல் துளிகளும்…

நீ
நான்
துளி மழை
இவை தான்
நம் இயற்கை…

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்