Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் முதன்முறையாக - தொலைபேசி இல்லாத ஒரு நாள்!!

பிரான்சில் முதன்முறையாக - தொலைபேசி இல்லாத ஒரு நாள்!!

18 சித்திரை 2025 வெள்ளி 15:15 | பார்வைகள் : 2017


தொலைபேசி இல்லாத ஒரு நாளை கடைப்பிடிக்கும் முயற்சி ஒன்று பரிசில் இடம்பெற உள்ளது. ” la première journée sans téléphone de France” எனும் இந்த நிகழ்வு பிரான்சில் முதன்முறையாக கொண்டாடப்பட உள்ளது.

பிரெஞ்சு மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 600 தொடக்கம் 700 வரை தொலைபேசி திரையை தொடுகிறார்கள். திரை நேரம் 6 மணிநேரத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், தொலைபேசி பயன்பாடு தொடர்பிலான விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில், வரும் ஜூன் 22ஆம் திகதி அன்று தொலைபேசிகளை வீட்டில் வைத்துவிட்டு ஒரு பொது இடத்தில் கூடவேண்டும். இதுவே நிகழ்வின் சுருக்கம்.

பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் உள்ள Quai de Solférino பகுதிக்கு அருகே ஒன்று கூடி அங்கு இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். இந்த நிகழ்வை பரிஸ் நகரசபையும் My little Paris எனும் அமைப்பும் இணைந்து நடாத்த உள்ளது.

சவாலுக்கு நீங்கள் தயாரா?

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்