பேரிச்சம்பழம் பாயாசம்

18 சித்திரை 2025 வெள்ளி 14:30 | பார்வைகள் : 198
கோடை விடுமுறை வந்தாச்சு.. குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதினால் அடிக்கடி ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் கேட்டுக் கொண்டே இருக்கின்றார்களா... குழந்தைகளுக்கு கோடை காலத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நிறைந்தவற்றை கொடுக்க வேண்டும். ஏனென்றால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பொழுது உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி இந்த அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்தவை தான் பேரிச்சை பழம் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறுகின்றார்.
ஆகையால் இந்த கோடை விடுமுறைகள் குழந்தைகளுக்கு சத்தான ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும் என்றால் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழத்தில், பேரிச்சம் பழம் பாயாசம் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோமா..
இதற்கு தேவையான பொருட்கள் பேரிச்சம் பழம் 100 கிராம், பாதாம் பருப்பு 4, ஏலக்காய் 3, கோதுமை மாவு 100 கிராம், பால் ஒரு லிட்டர், நெய் 3 டேபிள் ஸ்பூன், முந்திரி 5, திராட்சை 8 இதனை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பாதாம் பருப்பை துருவி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடியாக செய்து வைத்துக் கொள்ளவும். அரை கப் சூடான பாலில் பேரிச்சம் பழங்களை போட்டு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் முந்திரி திராட்சை போட்டு பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே நெய்யில் கோதுமையையும் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும். கோதுமை வாசனை போகும் வரை இரண்டு நிமிடம் வறுக்க வேண்டும். வறுத்த கோதுமை மாவில் அரை கப் ஆற வைத்த பாலை ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். மீதி இருக்கும் பாலை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். அரைத்து வைத்திருக்கும் கோதுமை கலவையை அதில் ஊட்டி கொண்டு பாலை நன்றாக கிளற வேண்டும்.
இரண்டு நிமிடம் கழித்து ஊறவைத்த பேரிச்சம் பழத்தை போட்டு தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும் கலவை சற்று கெட்டியாக வந்ததும் மூன்று நிமிடம் கழித்து சர்க்கரையை போட்டு நன்றாக கிண்டி விடவும் அதில் ஏலக்காய் பொடியையும் தூவி கலக்கி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு துருவிய பாதாம் மற்றும் வருத்தம் முந்திரி திராட்சையை போட்டு சாப்பிட்டால் சுவையான சத்தான ருசியான ஸ்னாக்ஸ் வந்துவிடும்.