Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

இலங்கையில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

18 சித்திரை 2025 வெள்ளி 08:57 | பார்வைகள் : 354


ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஈஸ்டர் பண்டிகை 2025.04.18 மற்றும் 2025.04.20 ஆகிய திகதிகளில் நடைபெறுவதால், அந்த நாட்களில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பதில் பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவால், அனைத்து மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரக்கூடிய தேவாலயங்களைக் கண்டறிந்து, அந்த இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யவும், பிரதான ஆராதனைகள் நடைபெறும் தேவாலயங்களில் அதிக கவனம் செலுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், இதற்காக பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படை அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்