ஐபிஎல் வரலாற்றில் சாதனை பட்டியலில் இணைந்த ரோஹித் ஷர்மா
 
                    18 சித்திரை 2025 வெள்ளி 07:52 | பார்வைகள் : 1973
மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் ஷர்மா ஒரே மைதானத்தில் 100 சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் இணைந்தார்.
நேற்று நடந்த ஐபிஎல் 2025 லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸின் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) 16 பந்துகளில் 26 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில், ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 100 சிக்ஸர்களுக்கும் மேல் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) இணைந்தார்.
ஒரே மைதானத்தில் 100 சிக்ஸர்கள் விளாசியவர்கள்:
•    விராட் கோஹ்லி - 130 சிக்ஸர்கள் (சின்னசாமி மைதானம்)
•    கிறிஸ் கெய்ல் - 127 சிக்ஸர்கள் (சின்னசாமி மைதானம்)
•    ஏபி டி வில்லியர்ஸ் - 118 சிக்ஸர்கள் (சின்னசாமி மைதானம்)
•    ரோஹித் ஷர்மா - 102 சிக்ஸர்கள் (வான்கடே மைதானம்)    
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
        KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan