பனிச்சரிவு : Savoie மாவட்டத்துக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை!!
18 சித்திரை 2025 வெள்ளி 06:51 | பார்வைகள் : 3522
பனிச்சரிவு காரணமாக Savoie மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிச்சறுக்கு வீரர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டத்தில் உள்ள Vanoise, Haute-Maurienne மற்றும் Haute-Tarentaise ஆகிய மலைகளில் சாகச விளையாட்டுக்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை காலை 6 மணிமுதல் 10 மணிவரையும், மாலை 4 மணி முதல் சனிக்கிழமை காலை வரையும் இந்த எச்சரிக்கையை Météo France விடுத்துள்ளது.

அதேவேளை, மேற்கு மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல்கள் காரணமாக மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan