பரிஸ் : திருடப்பட்ட மகிழுந்து ஒன்றில் பயணித்த - நால்வர் கைது!!

18 சித்திரை 2025 வெள்ளி 05:41 | பார்வைகள் : 2929
காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்த நால்வர் கொண்ட குழு ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏப்ரல் 17, நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் 19 ஆம் வட்டாரத்தின் Robert-Debré மருத்துவமனைக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஃபோக்ஸ்வாகன் மகிழுந்து ஒன்று வேகமாக பயணித்த நிலையில், அதனை தடுத்து நிறுத்த காவல்துறையினர் முற்பட்டனர். அதன்போது கட்டுப்பாட்டை மீறி அவர்கள் பயணித்துள்ளனர்.
அதன் பின்னர், மகிழுந்தை துரத்திப் பிடித்து அதில் பயணித்தவர்களைக் கைது செய்துள்ளனர்.
அவர்கள் பயணித்த மகிழுந்து Créteil நகரில் திருடப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. 17 வயதுடைய இருவம், 18 வயதுடைய இருவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025