Paristamil Navigation Paristamil advert login

14,000 யூரோ மதிப்புள்ள நகைகள் கொள்ளை: Bobigny நகரில் நால்வர் கைது!!

14,000 யூரோ மதிப்புள்ள நகைகள் கொள்ளை: Bobigny நகரில் நால்வர் கைது!!

18 சித்திரை 2025 வெள்ளி 06:11 | பார்வைகள் : 1684


Bobigny நகரில், பல நகைக்கடைகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் ஏப்ரல் 9-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிலி மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், Île-de-France பகுதியிலுள்ள வணிக மையங்களில் உள்ள நகைக்கடைகளை குறிவைத்து கொள்ளை செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

முதல் திருட்டு மார்ச் 26-ம் தேதி Ormesson-sur-Marne பகுதியில் நடந்துள்ளது. ஒருவர் வாங்கும் நபராக நடித்து, மற்றவர் அலமாரிகளை திறந்துள்ளார். வெளியே இருந்த இருவர் பாதுகாப்பாக வழியை உறுதி செய்துள்ளனர். மேலும் குற்றச்செயலை செய்ய, Bluetooth சாதனங்கள் மூலம் ஒருவரையொருவர் தொடர்பில் இருந்துள்ளனர்.

இது போன்ற ஒரு திருட்டு Pontault-Combault பகுதியில் மீண்டும் நிகழ்ந்த போது, போலீசார் அவர்களை பின்தொடர்ந்து கைது செய்தனர். சுமார் 14,000 யூரோ மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டன. தற்போது அவர்கள் காவலில் வைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கபட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்