Beauvais விமான நிலையத்தில் வாகனங்கள் மற்றும் பயணிகள் மீது கடும் பரிசோதனை!
17 சித்திரை 2025 வியாழன் 22:12 | பார்வைகள் : 3282
ஏப்ரல் 17 அன்று Beauvais விமான நிலையத்தில் காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளால் Taxi, VTC(சாரதியுடன் கூடிய வாடகை வாகனங்கள்), பஸ்கள் மற்றும் பயணிகள் பரிசோதனை செய்யபட்டனர். இந்த நடவடிக்கை சட்டவிரோத போக்குவரத்து சேவைகளை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடத்தப்பட்டன.
பல்வேறு சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அனுமதியில்லாத VTC சேவைகள் மற்றும் விதிமீறல்கள் அதிகமாக நடைபெறுவதால் இந்த பரிசோதனைகள் அரசு போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் பயணச் சட்டங்களை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி என்று கூறி உள்ளனர்.
மேலும் பயணிகளின் நலனுக்காக தொடர்ந்து இத்தகைய கண்காணிப்புகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan