சிறைச்சாலை வன்முறை : 21 வாகனங்கள் தீக்கிரை.. !!

17 சித்திரை 2025 வியாழன் 18:10 | பார்வைகள் : 859
சிறைச்சாலை அதிகாரிகளின் மகிழுந்துகள் இலக்கு வைத்து தாக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த தாக்குதல்கள் பதிவாகி வருகின்றன.
இன்று ஏப்ரல் 17, வியாழக்கிழமை Amiens (Somme) நகரில் தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. அங்கு வசிக்கும் சிறைச்சாலை பெண் அதிகாரி ஒருவரது மகிழுந்து எரியூட்டப்பட்டதோடு, அவரது வீட்டின் வெளியே உள்ள தபால் பெட்டியும் சேதமாக்கப்பட்டிருந்தது.
கடந்த 13 ஆம் திகதி இரவில் இருந்து இதுவரை 21 மகிழுந்துகள் எரியூட்டப்பட்டுள்ளன. 12 சம்பவங்கள் ஒருங்கிணைந்த குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒருவருக்கு ஒருவர் தொடர்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.