ஈஸ்ட்டர் விடுமுறை : வீதி நெரிசல்.. ● சிவப்பு எச்சரிக்கை!

17 சித்திரை 2025 வியாழன் 17:54 | பார்வைகள் : 720
ஈஸ்ட்டர் விடுமுறையை அடுத்து நாடு முழுவதும் உள்ள வெளிச்செல்லும் (départs) வீதிகள் அனைத்திலும் பலத்த போக்குவரத்து நெரிசல் பதிவாகும் என வீதி போக்குவரத்து கண்காணிப்பாளர்களான Bison futé அறிவித்துள்ளது.
நாளை ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை நாடு முழுவதற்கும் 'சிவப்பு' நிற எச்சரிக்கையும், உள்வரும் வீதிகளுக்கு (Retours) 'செம்மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
19 ஆம் திகதி சனிக்கிழமை வெளிச்செல்லும் வீதிகளுக்கு இல் து பிரான்ஸ் உட்பட வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும், ஏனைய பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும், உள்வரும் வீதிகளுக்கு பச்சை நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.