Paristamil Navigation Paristamil advert login

Aulnay-sous-Bois : வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு ரைஃபிள் துப்பாக்கிகள்.. பெண் கைது!!

Aulnay-sous-Bois : வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு ரைஃபிள் துப்பாக்கிகள்.. பெண் கைது!!

17 சித்திரை 2025 வியாழன் 17:34 | பார்வைகள் : 943


Aulnay-sous-Bois நகரில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு ரைஃபிள் வகை துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டின் மொட்டைமாடி பகுதியில் அதனை பதுக்கி வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று ஏப்ரல் 16, புதன்கிழமை மாலை 5 மணி அளவில் காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டனர். பெண் ஒருவர் வீட்டின் மொட்டைமாடியில் துப்பாக்கியுடன் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை அடுத்து சம்பவம் இடம்பெற்ற Rue Docteur-Schweitzer வீதியில் உள்ள வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு 59 வயதுடைய பெண் ஒருவர் மொட்டைமாடியில் மறைத்துவைத்திருந்த துப்பாக்கிகளை மீட்டனர்.

அப்பெண் கைது செய்யப்பட்டார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்