சாள்-து-கோலில் இருந்து தாய்லாந்தின் புகெட் தீவுக்கு நேரடி விமானம்!!

17 சித்திரை 2025 வியாழன் 14:55 | பார்வைகள் : 792
தாய்லாந்தின் Phuket தீவுக்கு பரிசில் இருந்து நேரடி விமான சேவை ஒன்றை எயார் பிரான்ஸ் நிறுவனம் ஆரம்பிக்க உள்ளது.
ஏப்ரல் 16, நேற்று புதன்கிழமை இத்தகவலை எயார் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து Phuket தீவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்பட உள்ளது. 472 இருக்கைகளை கொண்ட Boeing 777-300ER விமானமே சேவைக்கு வர உள்ளது. முதலாவது விமானம் இவ்வருடம் நவம்பர் 27 ஆம் திகதி பயணிக்க உள்ளது.
வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமை நாட்களில் பரிஸ் நேரம் மாலை 3.30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முற்பகல் 11.50 மணிக்கும் விமானம் பயணிக்கும்.
எயார் பிரான்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் தெற்காசிய நகரங்களுக்கு நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.