Paristamil Navigation Paristamil advert login

பரிஸில் உக்ரைன் போர் குறித்து மாநாடு! சமாதானத்திற்கு ரஷ்யா மீது அழுத்தம் தேவை: செலென்ஸ்கி

பரிஸில் உக்ரைன் போர் குறித்து மாநாடு! சமாதானத்திற்கு ரஷ்யா மீது அழுத்தம் தேவை: செலென்ஸ்கி

17 சித்திரை 2025 வியாழன் 13:55 | பார்வைகள் : 1630


உக்ரைனில் நடைபெறும் போருக்கு தீர்வு காணும் முயற்சியாக, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் உக்ரைன் நாடுகளின் பிரதிநிதிகள் பரிஸில் இன்று சந்தித்தனர். 

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும், உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கியின் (Zelensky) பிரதிநிதிகளும், டொனால்ட் டிரம்பின் தூதுவரும் இதில் பங்கேற்றனர்.

இதில் உக்ரைன் - ரஷ்யா போர்நிலை, அமெரிக்கா வரிவிகிதங்கள், மத்திய கிழக்கு பிராந்திய பதற்றங்கள், மற்றும் ஈரான் அணு ஒப்பந்தம் குறித்தும் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

 உக்ரைனில் இருந்து செலென்ஸ்கி, ரஷ்யா மீது அழுத்தம் அதிகரிக்க வேண்டும் என்றும், போரை முடித்து நிலையான சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்றும் தனது டெலிகிராம் மூலமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-ஐரோப்பிய உறவுகளில் ஏற்பட்ட பதற்றங்களைத் தாண்டி, இந்த சந்திப்பு முக்கியமான தீர்வுகளை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்