அல்ஜீரியாவின் பாரிய இலக்கு நான் - உள்துறை அமைச்சர் -
17 சித்திரை 2025 வியாழன் 11:27 | பார்வைகள் : 5367
«அல்ஜீரிய அரசாங்கத்தின் பிரதான, பாரிய இலக்கு நானாகவே உள்ளேன்» என, பிரான்சின் உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தெய்யோ தெரிவித்துள்ளார்.
அல்ஜீரியா அரசாங்கம், இந்த இராஜதந்திரப் பிணக்கு நிலைக்கு உள்துறை அமைச்சர் மட்டுமே காரணம் என வெளிப்படையகாவே தெரிவித்துள்ளது.
«இதற்காக நான் ஒன்றும் அச்சம் கொள்ளப் போவதில்லை. அல்ஜீரியாவின் ஊதியத்தில் இயங்கும் ஊடகங்களில் நானே தலைப்புச் செய்தியாக இருக்கின்றேன்»
«பிரான்சின் உயர்ந்த நலன்களைப் பொறுத்தவரை, என்னை அச்சுறுத்த முடியாது என்பதை என்னை மிரட்டுபவர்களிற்குத் தெளிவாகக் கூற விரும்பகின்றேன்»
எனவும் அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan