மெஸ்ஸியின் இமாலய சாதனையை சமன் செய்த ஜேர்மன் வீரர்! சாம்பியன்ஸ் லீக்கில் புதிய வரலாறு

17 சித்திரை 2025 வியாழன் 07:08 | பார்வைகள் : 223
சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக ஆட்டங்கள் ஆடிய மூன்றாவது வீரர் எனும் சாதனையை ஜேர்மனின் தாமஸ் முல்லர் படைத்துள்ளார்.
UEFA சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் பாயர்ன் முனிச் (Bayern Munich) மற்றும் இன்டர் மிலன் அணிகள் மோதின.
இன்டர் மிலனின் லாடரோ மார்ட்டினெஸ் (58வது நிமிடம்), பெஞ்சமின் பாவர்ட் (61வது நிமிடம்) இருவரும் கோல் அடித்தனர்.
அதேபோல் பாயர்ன் முனிச் வீரர்கள் ஹாரி கேன் (52வது நிமிடம்), எரிக் டையர் (76வது நிமிடம்) ஆகியோர் கோல் அடிக்க, போட்டி 2-2 என டிரா ஆனது.
எனினும் Aggregateயில் 4-3 என்ற கணக்கில் பாயர்ன் முனிச்சை முந்தி இன்டர் மிலன் அரையிறுதிக்குள் நுழைந்தது. இப்போட்டி பாயர்ன் முனிச் வீரர் தாமஸ் முல்லருக்கு 163வது சாம்பியன்ஸ் லீக் போட்டி ஆகும்.
இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக ஆட்டங்கள் ஆடிய மூன்றாவது வீரர் எனும் சாதனையை அவர் படைத்தார்.
மேலும் அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi) எண்ணிக்கையை சமன் செய்தார். அவர் இன்டர் மியாமிக்கு மாறுவதற்கு 163 சாம்பியன்ஸ் ஆட்டங்களில் விளையாடி இருந்தார்.
ஜேர்மன் வீரராக அதிக UEFAயில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக தாமஸ் முல்லர் (Thomas Muller) இருக்கிறார்.
இப்பட்டியலில் போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 183 ஆட்டங்களுடன் முதல் இடத்திலும், ஸ்பானிஷ் கோல் கீப்பர் ஐகர் கேஸிலாஸ் 177 ஆட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.