கூட்டணிக்கு சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு
17 சித்திரை 2025 வியாழன் 10:19 | பார்வைகள் : 2290
தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் டிவிக்கு நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: கூட்டணிக்கு இன்னும் கட்சிகளை எதிர்பார்க்கிறோம். அதாவது தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மாற்று அரசாங்கம் வேண்டும். இதற்காக எந்த கட்சிகள் வந்தாலும் கூட்டணிக்கு சேர்த்து கொள்வோம். எல்லோரும் வர வேண்டும்.
தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சி வர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஏன் முடியாது? மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன. சீமானை நான் கூட்டணிக்கு அழைக்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan