இணையத்தில் டிரெண்டாகும் SkinnyTok

16 சித்திரை 2025 புதன் 14:57 | பார்வைகள் : 296
சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புதிது புதிதாக சில விடயங்கள் டிரெண்ட் ஆகும்.
யாரோ ஒருவர் ஒரு விடயத்தை செய்து அதை சமூகவலைத்தளத்தில் பதிவிட, அது குறித்து ஆராயாமல் இணையவாசிகள் பலரும் அதை பின்தொடர்வார்கள்.
சில டிரெண்ட்கள் ஆபத்தாக இருந்தாலும் கூட பலரும் அதை பின்தொடர்வார்கள்.
அதே போல் தற்போது சமூகவலைத்தளங்களில் ஸ்கின்னி டொக் (SkinnyTok), என்ற புதுவகையான விடயம் டிரெண்ட் ஆகி வருகிறது.
டிக்டொக், இன்ஸ்டாகிராம், ரெட்டிட் உள்ளிட்ட தளங்களில், பல்வேறு பயனர்கள் SkinnyTok என்ற பெயரில், வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த SkinnyTok என்பது, உடல் இளைப்பது, ஒழுங்கற்ற உணவு பழக்கம், பட்டினியாக இருப்பது ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
இதனை பின்பற்றுபவர்கள், 'பசி உணர்வு என்பது இயற்கையான உயிரியல் சமிக்ஞை அல்ல; என்று பின்தொடர்பவர்களுக்குக் கற்பிக்கின்றனர்.
மேலும், அதிக உணவு உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் குறைந்த அளவில் உணவு உட்கொள்ள வேண்டும் (பெரும்பாலும் பழங்கள் மட்டுமே)
இயற்கையான பசியை அடக்க, அதிகப்படியான தண்ணீர் காபி போன்ற திரவ பானங்களை உட்கொள்ள வேண்டும் போன்ற ஆபத்தான நடைமுறைகளை பரிந்துரைகின்றனர்.
ஆனால் இதன் பின்னணியில் உள்ள ஆபத்துகள் குறித்து, மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆபத்தான போக்குகள், இதயப் பிரச்சினைகள், மலட்டுத்தன்மை வளர்சிதை மாற்றம், மன ஆரோக்கியம், ஹார்மோன் ஒழுங்குமுறை ஆகியவற்றிற்கு வழிவகுப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஒல்லியாக இருப்பதே அழகான மற்றும் ஆரோக்கியமான உடலமைப்பு என்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர்.
ஏற்கனவே ஒழுங்கற்ற உணவு முறை பெரிய பொது சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 9% பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது உணவுக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த சூழலில் சமூகவலைத்தளங்களில் வைரலாகும் இந்த போக்குகள், அதை ஊக்குவிக்கிறது.