Gare de l'Est நிலையத்தில் வெடிகுண்டு புரளி.. அவசர வெளியேற்றம்!!

16 சித்திரை 2025 புதன் 10:52 | பார்வைகள் : 2099
Gare de l'Est நிலையத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, இன்று காலை நிலையம் அவசரமாக வெளியேற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
ஏப்ரல் 16, இன்று புதன்கிழமை காலை இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பயணிகள் நிலையத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், காலை 10.25 மணி அளவில் நிலையத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டு அகற்றும் அதிகாரிகள் அழைக்கப்பட்டு நிலையம் சோதனையிடப்பட்டது. அதை அடுத்து தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. நண்பகல் வேளையில் நிலையம் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Metz (Moselle) நகர் நோக்கி பயணிக்க தயாரான TGV தடைப்பட்டுள்ளது.