பழிக்குப்பழி - பிரான்சின் அல்ஜீரிய அதிகாரிகளும் வெளியேற்றம்!

15 சித்திரை 2025 செவ்வாய் 19:31 | பார்வைகள் : 2515
அல்ஜீரியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட பிரெஞ்சுத் தூதரக அதிகரிகள் பிரான்ஸ் நோக்கி வந்து கொண்டு இருக்கின்றனர்.
அல்ஜீரியாவிற்கு எதிராக தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்த நிலையில் மிக கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
«அல்ஜீரியா மிகவும் மோசமான முடிவை எடுத்துள்ளது. அவர்களின் நியாமற்ற, புரிந்த கொள்ள முடியாத முடிவிற்குப் பதிலளிக்கும் முகமாக பிரான்சில் உள்ள அல்ஜீரியத் தூதரகத்தின் அதிகாரிகள் 12 பேரும் உடனடியாகப் பிரான்சை விடடு வெளியேற வேண்டும்» எனப் பணிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை எமானுவல் மக்ரோன் பிரான்சிற்கான அல்ஜீரியத் தூதுவரை அழைத்துத் தெரிவித்துள்ளார்.