‘பராசக்தி’ படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரபல மலையாள இயக்குனர்!
16 பங்குனி 2025 ஞாயிறு 09:17 | பார்வைகள் : 4636
சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தினை சுதா கொங்கரா இயக்க டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். மேலும் அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதே சமயம் பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்விராஜனும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது பிரபல மலையாள நடிகர் ஒருவரும் பராசக்தி படத்தில் இணைந்திருப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.'பராசக்தி' படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரபல மலையாள இயக்குனர்!அதன்படி பிரபல இயக்குனரும் நடிகருமான பசில் ஜோசப் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் உண்மை என்றால் பசில் ஜோசப் தமிழில் அறிமுகமாக முதல் படம் பராசக்தி என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது பராசக்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு தற்போது இலங்கையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan