ஜனாதிபதி பேரில் போலி குறுந்தகவல்கள்.. எச்சரிக்கும் எலிசே!!
15 பங்குனி 2025 சனி 14:15 | பார்வைகள் : 6718
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் பெயரில் உலாவும் குறுந்தகவல் ஒன்று போலியானது எனவும், அது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் எலிசே தெரிவித்துள்ளது.
Signal எனும் செயலினைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் அக்குற்றவாளிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 'வணக்கம், என்னுடைய Signal இலக்கமூடாக உங்களுடைய செய்திகளை அனுப்பவும். என்னுடைய தொலைபேசி இலக்கம் +33****** - இம்மானுவல் மக்ரோன்" என குறிப்பிடும் இந்த குறுந்தகவல் (Envoyez-moi maintenant un message sur l’application Signal. Mon numéro Signal est + 33 7… Merci. Emmanuel Macron.) தற்போது பரபரப்பாக தொலைபேசிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த தகவல் போலியானது எனவும், பண மோசடிக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan