இலங்கையில் ஆசிரியையின் முகத்தை ஆபாசப்புகைப்படத்துடன் இணைத்த மாணவர்கள்

14 பங்குனி 2025 வெள்ளி 12:52 | பார்வைகள் : 1941
கண்டிப்பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் இணைந்து ஆபாசப்புகைப்படம் ஒன்றை உருவாக்கி அதில் தமது பாடசாலை இளம் ஆசிரியை ஒருவரின் முகத்தை இணைத்து தமக்குள்ளே பகிர்ந்து கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுன்னர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியை கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் படி, மேற்படி மாணவர்களது மடிகணனி மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் பத்தாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் என்றும் தெரியவருகிறது.
மேலும், இது தொடர்பான விரிவான விசாரணைகள் இடம் பெற்று வருவதாகப் கண்டிப் பொலிஸார் தெரிவித்தனர்.