2025ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாகிய இலங்கை

14 பங்குனி 2025 வெள்ளி 08:29 | பார்வைகள் : 8315
இலங்கை 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக காண்டே நாஸ்ட் டிராவலர் பெயரிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் குடும்ப நட்பு நாடுகள் பட்டியல் இலங்கை, சுவீடன், நோர்வே, நியூசிலாந்து, ஐஸ்லாந்து, ஜேர்மனி, பின்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, அமெரிக்கா என அமைந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் பயனாளர்களுக்கு பணம் அனுப்ப உதவும் அமெரிக்காவின் ரெமிட்லி மீள்குடியேற விரும்புபவர்களுக்கு தெரிவிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய குடிவரவு சுட்டெண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
2025 மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை சுகாதாரத் தரம், பொருளாதார வலிமையிலிருந்து பாதுகாப்பு அளவீடுகள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு வரையான 24 காரணிகளில் 82 நாடுகளை தர வரிசைப் படுத்தி ஒவ்வொன்றுக்கும் மொத்தம் 100 மதிப்பெண்களை வழங்குகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் கல்வியின் தரம் மற்றும் கல்வியைப் பெற்றுக்கொள்தல் போன்ற தரவுப்புள்ளிகளைப் பார்ப்பதனூடான
ஒரு நாடு எவ்வளவு குடும்ப நட்புடன் உள்ளது என்பது கருத்திற்கொள்ளப்படுகின்றது.இதில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கை அதன் கல்வி முறைமையினால் ஈர்க்கக்கூடிய மதிப்பெண்ணை பெற்றுள்ளதுடன் 10ஆவது இடத்திலுள்ள அமெரிக்காவில் வருடாந்தம் 16439.40 டொலர் செலவுடன் ஒப்பிடும் போது ஆண்டொன்றுக்கு 354.60 டொலர் என்ற குறைந்த வருடாந்த குழந்தை பராமரிப்பு செலவையும் கொண்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025