Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர்

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர்

13 பங்குனி 2025 வியாழன் 08:54 | பார்வைகள் : 3407


 போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அவுஸ்திரேலியா முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சிக்கியுள்ளார்.

1998 ஆம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ஸ்டூவர்ட் மெக்கில்.
 
சுழற்பந்து வீச்சாளரான இவர், அவுஸ்திரேலியா அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 208 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு சர்வேதச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஸ்டூவர்ட் மெக்கில்.

கடந்த 2021 ஆம் ஆண்டு, 3,30,000 அமெரிக்க டொலர் மதிப்பு 1 கிலோ அளவிலான கொக்கைன் எனும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புள்ளதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு சிட்னி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, "சிட்னியின் வடக்கு கடற்கரையில் உள்ள தனது உணவகத்தில் வைத்து, வழக்கமாக போதைப் பொருள் வழங்கும் நபரை தனது உறவினரான Marino Sotiropoulos என்பவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதன் மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்டதாகவும் மெக்கில் மீது குற்றம்சாட்டப்பட்டது. தனக்கு இதில் தொடர்பில்லை என இந்த குற்றச்சாட்டை மெக்கில் மறுத்துள்ளார்.

மெக்கிலின் ஈடுபாடு இல்லாமல் இந்த கடத்தல் நடைபெற்றிருக்க முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் அவருக்கு ஈடுபாடு உள்ளதால் அதற்கேற்ற அளவிலான தண்டனையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அவருக்கான தண்டனை அறிவிப்பை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.   

 

வர்த்தக‌ விளம்பரங்கள்