கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் மைக் கார்னி
13 பங்குனி 2025 வியாழன் 08:48 | பார்வைகள் : 4779
லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் கார்னி, நாளை கனடாவின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
கனடா வங்கியின் முன்னாள் தலைவரான மைக் கார்னி, நாளை, மார்ச் மாதம் 14ஆம் திகதி, வெள்ளிக்கிழமை காலை, கனடாவின் 24ஆவது பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்த தகவலை கனடா கவர்னர் ஜெனரல் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
லிபரல் கட்சித் தலைவராக, 131,674 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற கார்னி, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலாக, கனடாவின் பிரதமர் ஆகிறார்.
கனடாவின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கப்படும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பை தான் சந்திக்கத் தயார் என்று கூறியுள்ள கார்னி, என்றாலும், ஒரு நாளும் கனடா அமெரிக்காவின் ஒரு பாகமாக மாறாது என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan